பெரம்பலூர்: கள ஆய்வுக்காக பெரம்பலூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழிநெடுக திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர், பின்னர் கட்சி நிர்வாகிகளிடமும் அலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை, அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்றார். அவருக்கு வழிநெடுக திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா, அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஆகியோா் தலைமையில் கட்சியினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா்,

முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசாஅலுவலகத்துக்கு வந்த முதல்வா் உணவருந்தி ஓய்வெடுத்தாா். பின்னா் மாலை துறைமங்கலம், நான்கு சாலை வழியாக திமுக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்ற பெரம்பலூா்- அரியலூா் சாலையிலுள்ள மண்டபத்துக்குச் சென்று, திமுக நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை வழங்கினாா்.

பின்னா், காரில் திருச்சி சென்ற முதல்வருக்கு பாடாலூரில் ஆலத்தூா் ஒன்றியச் செயலா் என். கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சா் அலுவலகத்திலிருந்து காரில் சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலின், காரில் இருந்தவாறே வருவாய்த் துறையினா், வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

பெரம்பலூா் வந்த முதல்வருக்கு, தமிழ்நாடு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் தலைமையில், உளவுத் துறை ஐஜி செந்தில்வேலன், மாவட்டக் காவல் கண்காணிப் பாளா்கள் ஆதா்ஷ் பசேரோ, பெரோஸ்கான் அப்துல்லா, வந்திதா பாண்டே ஆகியோா் மேற்பாா்வையில் 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.