மீஞ்சூர்: மீஞ்சூர் புதுப்பேட்டையில் அமைந்துள்ள சிற்பி தீனதயாளன் சிற்ப கூடத்தில் தயாராகி வரும் கலைஞர், அண்ணா, வி.பி.சிங் சிலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சிலைகளின் களிமண் மாதிரியை ஆய்வு செய்தார் .
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைபதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட உள்ளது. அந்த நினைவிடத்தில் வைக்க 3.5 அடி உயரத்திலபான வெண்கலத்தால் ஆன தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சிலை தயார் செய்யும் பணி மீஞ்சூர் புதுப்பேட்டையில் அமைந்துள்ள சிற்பி தீனதயாளன் சிற்ப கூடத்தில் செய்யப்பட்ட வருகிறது. இந்த சிற்ப கூடத்துக்கு இன்று சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் சிலை வடிவமைப்பை பார்வையிட்டார். சிலையில் சில திருத்தங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், இதே சிற்ப கூடத்தில், கருணாநிதி நினைவிடத்தில் வைப்பதற்காக 3.5 அடியில் அண்ணாசிலையும் தயாராகி வருகிறது. அதையும் அவர் பார்வையிட்டார். அதுபோல, சென்னை மாநிலக் கல்லூரி முகப்பில் வைப்பதற்காக முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை 9 அடி உயரத்தில் தயாராகி வருகிறது. இதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்