சென்னை: தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளனர்.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உகாதி திருநாள் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!.மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக!இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! திராவிட மாடல் 2.0 அமையட்டும்!
இவ்வாறு கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]