சென்னை:  2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள திமுக,  இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்  தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்.

2026, மே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக கூட்டணியும், ஆட்சியை கைப்பற்றி அதிமு தலைமையிலான கூட்டணியும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.  இந்த நிலையில், இன்று  அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார்.

முதல்நாளான இன்று,. பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம், பரமக்குடி தொகுதிக்கான திமுக நிர்வாகிகளை முதல்வர் சந்தித்து வருகிறார். இதைத்தொடர்ந்து  அடுத்த 3 நாட்களும் ( ஜூன் 20 வரை)  சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை முதல்வர் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.