சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோவில், ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 தமிழ்நாட்டின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக,   காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்  துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து  வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை பொதுமக்கள், வணிகர்கள் என பல தரப்பினரும், வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, சிப்காட்டுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு    திட்டத்தின் முதல் பகுதியாக 18.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13.33 கோடி ரூபாய் மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை மையத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள, மறு பொறியியல் பரிசோதனைக் கூடம், சேர்க்கை உற்பத்தி மையம், மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவற்றை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.