டெல்லி: இன்று நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந் சந்திப்பானது குடும்பத்தினரை சந்தித்தது போல இருந்தது முதலமைச்சர் பதிவிட்டு உள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து கருத்து கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்து போல இருந்தது. ஒவ்வொருமுறை இவர்களை சந்திக்கும்போது, ஓர் அரவணைப்பு கிடைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் தமிழக சுற்றுலா பயணி பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்வுகளின்போது தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.