சென்னை: தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறைக்கு தேர்வான 158 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறையில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 158 நபர்களுக்கு பணி நியமன ஆணைகைளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.