ராணிப்பேட்டை : தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகனங்கள் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த ஆலைக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், ஆலையை இன்று உற்பத்திக்காக திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்த டாடா ஆலையானது, ரூ.9,000 கோடி முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.


ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்