சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை மக்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி மூலம், தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக சென்னை நகர் முழுவதும் குறிப்பிட்ட 50 இடங்களில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தானியங்கி இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கட்டணமில்லா குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 18) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, சென்னை மெரினா கடற்கரையில் குடிநீர் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர். இந்த தானியங்கி இயந்திரம் மூலம் பொதுமக்கள் கட்டணமில்லா குடிநீர் பெறலாம்.
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில், அவர்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்கும் வகையில், 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் ஏடிஎம்-களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், வெளியூர்களிலிருந்து வேலை தேடி வருவோர், இங்கு வேலை கிடைத்து செட்டில் ஆவதால், வருடம்தோறும் மக்கள் தொகை அதிரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு அருகிலேயே துணை நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதை கருத்தில்கொண்டு, , சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி, சென்னையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விதமாக, புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின்படி, 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்-களை நிறுவி உள்ளது சென்னை மாநகராட்சி. இந்த குடிநீர் ஏடிஎம்-கள், சென்னை கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், மார்கெட் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட் பகுதி, சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா உள்ளிட்ட 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்-களை நிறுவவி உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், பொதுமக்கள் கட்டணமின்றி, ஆர்.ஓ மற்றும் யூவி முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ள குடிநீர் ஏடிஎம்-களில், 2 அளவுகளில், அதாவது, குறைந்தபட்சம் 150 மில்லி லிட்டரும், அதிகபட்சமாக 1 லிட்டர் தண்ணீரையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும். தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்று, குடிநீர் ஏடிஎம்-ல் சுத்தமான குடிநீரை மக்கள் நிரப்பிக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் இணைந்து செயல்படுத்தும் இந்த குடிநீர் ஏடிஎம், 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.