மதுரை: கோவையைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டியிடம், விழா மேடையில், ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார். இது பெரும் வரவற்பை பெற்றுள்ளது. ஏழைமக்களின் பசியாற்றும் பாட்டியின் உணவுப்புரட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கோயமுத்தூர் அருகே உள்ள ஆலந்துறை த வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் 85வயதான கமலாத்தாள் பாட்டி கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். அதுவும் ஒரு இட்லி ஒரு ரூபாய் என்று விற்பனை செய்து வருகிறார். இதனால் இவரது புகழ் நாடு முழுவதும் பரவி வருகிறது. சாதரணமாக ஹோட்டல்களில் ஒரு இட்லி குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமா ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒருரூபாய்க்க இட்லி விற்பனை செய்வது வரும் பாட்டியை அனைத்து தரப்பினரும் புகழ்ந்து வருகின்றனர். இட்லி பாட்டியின் சேவையை பாராட்டி, பிரபல தொழிலதிபர், ஆனந்த் மகேந்திரா தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்து கவுரவித்துள்ளார்.
இந்த பாட்டியின் சேவை குறிந்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரை கவுரவிக்கும் வகையில், இன்று, பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட நிகழ்ச்சிக்கு வரவழைத்து, அவரிடம், ‘ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சி’யின் நூல் வழங்கி கவுரவித்தார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த இட்லி பாட்டி கமலாத்தாள் முதல்வர் உள்பட அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதாஜீவன்,ஏ.வ. வேலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.