சென்னை: கோசா மருத்துவமனையில்,  36 பச்சிளங்குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டி பரிசளித்தார்.

கடந்த மே மாதம் 26ந்தேதி கோசா ஆஸ்பிட்டல் என்று அழைக்கப்பட்டும்  சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மகப்பேறு நல அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.  முன்னதாக தீ விபத்து ஏற்பட்ட இன்குபேட்டர் எனப்படும் பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பு அறையில் இருந்த,  36 பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும் மற்றும் 11 குழந்தைகளுடன் தாய்மார்களும், என 47 பேர் அங்கு பணியாற்றி வந்த செவிலியர்கள் உடடினயாக அப்புறப்படுத்தினர். தீபிடித்த இன்குபேட்டர் அறை  கண்ணாடியால் மூடப்பட்டிருந்ததால், அதைஅங்கு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைத்து அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

தீயணைப்புப் படைவீரர்கள் வரும் முன்னே, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றினார். அவரது நடவடிக்கை வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், 36 குழந்தைகள் – தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் ஜெயக்குமாரை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாடாலின் பாராட்டி பரிசளித்தார்.

இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், 36 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் – தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் திரு. ஜெயக்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்! உயிர் காப்பதே அறம்! என கூறியுள்ளார்.