சென்னை:

மிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்றோடு 3வது நாளாக எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தை தொடர்ந்து ஜீரோ அவரில், முதல்வர் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்:

குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயது, பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாக உயர்வு

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க ரூ.42 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கீடு

உயர்கல்வித்துறையின் கீழ் 683 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்

2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 45.30 கோடி செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்

வனப்பகுதியில் ஏற்படும் தீயை அனணக்க வனச்சரகர்களுக்கு சிறப்பு பயிற்சி

30 கோடி செலவில் வனத்துறை தலைமை அலுவலகம் கட்டப்படும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 7 கோடி செலவில் புலிகள் காப்பகம்

அரசுக் கேபிள் டிவி டிஜிட்டல் சேவையினை மேம்படுத்தி HD முறையிலான செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும்.

கோவையில் 100 கோடி செலவிலும் திருச்சியில் 40 கோடி செலவிலும் தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் கட்டப்படும்.