சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று மாலை ரூ. 90.59 லட்சம் செலவில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நல்லத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொளத்தூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 90.59 லட்சம் செலவில் மறுசீரமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 100 மாணவிகளுக்கு புத்தகப்பைகளையும், ஆசிரியர்களுக்கு பரிசும் வழங்கினார். தொடர்ந்து, கொளத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். மற்றும், நகர்புற குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்ய கருணை தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கல்விக்கும் மருத்துவத்துக்கும் அதிகளவில் அக்கறை செலுத்தி வருகிறோம்; மாணவிகளுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அனிதா அகாடமி தொடங்கப்பட்டது என்று கூறினார். மேலும், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எதுவாக இருந்தாலும் எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்கக்கூடியவன் தான் நான்” என்று தெரிவித்தார்.