துபாய்:
துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவை நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை இன்று திறந்து வைத்தார்.
அப்போது, துபாயில் உள்ள தனது ஸ்டூடியோவிற்கு வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவை நேரில் சென்று பார்வையிட்டார்.
Patrikai.com official YouTube Channel