சென்னை: ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் – எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். புகழ்மாலைகள் குவியட்டும் என தெரிவித்த உள்ளார்.
நவீன கன்னட இலக்கியத்தில் ஆகப்பெறும் ஆளுமை குவெம்பு என்னும் கேவி புட்டப்பா. மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர். மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கன்னட தேசிய குவெம்பு விருது இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அறிஞர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுத்தாளர் இமயத்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது வாழ்த்துச்செய்தியில்,
கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் – எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான @writerimayam நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்! என வாழ்த்தியுள்ளார்.
திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் இமயம். இவரின் இயற்பெயர் அண்ணாமலை. இவர் இமையம் என்ற பெயரில் படைப்புகளை எழுதியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் செல்லாத பணம் என்ற படைப்பில் இவர் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார். குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த விருதை பெரும் முதல் தமிழ் எழுத்தாளர் இமயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதானது வெள்ளிப் பதக்கமும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் முடிப்பும் கொண்டது ஆகும் .
நவீன கன்னட இலக்கியத்தில் ஆகப்பெறும் ஆளுமை குவெம்பு என்னும் கேவி புட்டப்பா. மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர். ஞானபீட விருது பத்ம விருதுகளான பூசன் விருதுகளை பெற்றவர். அவர் பெயரில் சிமோகாவில் பல்கலைக்கழகம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.