சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 2 நாள்கள் நடக்கும் வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் `வேளாண் வணிகத் திருவிழா 2025′ நடைபெறுகிறது. இத்திருவிழா இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் நடைபெறுகிறது. இந்த . வணிக திருவிழாவில் கருத்தரங்கு, கலந்துரையாடல், உற்பத்தியாளர் – வணிகர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த வணிக திருவிழாவையொட்டி, 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் பொருள்கள், விதைகள் உள்பட வேளாண் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, புவிசார் குறியீடு பெற்ற வேளாண் பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் வேளாண் வணிக திருவிழா நடத்தப்பட உள்ளது. மாவட்டங்களில் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. இப்பொருட்கள் குறித்து, நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிந்து கொள்ளவும், சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பொருட்களை உணவில் சேர்ப்பதை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரித்தால், விவசாயிகள் வருவாய் அதிகரிக்கும். இதை கருத்தில் வைத்து, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நாளை மற்றும் நாளை மறுதினம், வேளாண் வணிக திருவிழாவிற்கு வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதை தொடர்ந்து, ஜனவரி மாதம், மதுரை மற்றும் திருநெல்வேலியில் வணிக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் வரும் 27ந்தேதி வேளாண் வணிகத் திருவிழா! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…