சென்னை: சொல்லியதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அரசின் சாதனைகளை தமிழ்நாடு அரசு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை மற்றும் அறிவியல் , பொறியியல்கல்லூரிகளில் ரூ.200 கோடி மதிப்பில் திறன் ஆய்வுகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவம், 1000 நபர்களுக்கு ஒன்றிய பணியாளர் தேர்வைணையம், ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான 6 மாத உறைவிட பயிற்சிக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.