சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் வகுப்பு. 11ம் வகுப்பி பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில், இன்று ரூ.2.80 கோடி மதிப்பிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, ரூ.6 லட்சம் மதிப்பிலான வ.உ.சி. பூங்கா புதுப்பித்தல் பணிகள், ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,. பின்னர் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது, தமிழகத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றார்.
மேலும், தமிழகத்தில், தற்போது 8 ஆயிரம் நூலங்கள் செயல்படுவதாகவும், அரசு பதவியேற்றவுடன் அதிக நூலகங்கள் திறக்கப்பட்டு, போட்டித்தேர்வுகளுக்கு தேவையான 8000 புத்தகங்கள் அடங்கிய நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.