சென்னை:
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை ஓபன் மகளிர் தொடரின் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை மக்தா லினெட்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, செக் குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பரிசுக்கான கோப்பையை லிண்டாவிற்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.