டில்லி:

சர்வதேச சட்ட சங்கம் சார்பில் கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தொடங்கி வைத்தார்.

இதில், வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் வாதாடுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் சம்மதம் தெரிவித்துள்ளார். 1961ம் ஆண்டு வக்கீல்கள் சட்டப்படி வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள முடியாது. ஏதாவது சில நாடுகள் இந்தியாவில் பதிவு பெற்ற வக்கீல்களை அவர்களது நாட்டில் பணியாற்ற அனுமதித்தால், அந்த நாடுகளின் வக்கீல்கள் இந்தியாவில் பணியாற்றலாம் என்றுள்ளது.

இதில் கேஹர் பேசுகையில்,‘‘கடந்த 70 ஆண்டுகளில் இந்திய சட்ட பணி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. நிர்வாகத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. நிர்வாகத்தில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக திகழ்கிறது. இந்தியாவில் 1.2 மில்லியன் வக்கீல்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளை இந்திய பார் கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது.

உலகமயமாக்கல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் சட்ட தொழில் மிகப்பெரிய மாற்றத்தை ச ந்தித்துள்ளது. பொருளாதார உலகமயமாக்காலால் வெளிநாட்டு வக்கீல்கள், சட்ட அமைப்புகளுடன் இணை ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் அறிவு மாற்றம், இந்திய சட்ட அறிவு எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பியாவில் சில நாடுகள் சட்டத் துறையில் தாரளாமயமாக்கல் குறித்து இந்திய அரசாங்கத்தை நாடியுள்ளன. வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்களது பரநிதிகள் மூலம் இ ந்திய சட்டப் பணிகளை சர்வதேச போட்டிக்கு திறந்து விட வலியுறுத்துகின்றன. க்ஷ

தற்போது படிப்படியாக இந்திய பார் கவுன்சில் மற்றும் சொசைட்டி ஆப் இந்தியன் லா ஆகியவை முதற்கட்டமாக சட்டத் துறையை வெளிநாட்டு போட்டியாளர்களுக்கும் திறந்துவிட சம்மதம் தெரிவித்துள்ளன.