சென்னை

மிழக வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.  பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றைச் சரி பார்த்து புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

நேற்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம்.

” வாக்காளர் பட்டியல் 28 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆகும். அதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665; மூன்றாம் பாலினத்தவர் 8,467 ஆகும். 

இந்த வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். 

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்களில் ஆண்கள் 10 லட்சத்து 24 ஆயிரத்து 149; பெண்கள் 10 லட்சத்து 61 ஆயிரத்து 457; மூன்றாம் பாலினத்தவர் 385 ஆகும். 

வடசென்னை தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224; ஆண்கள் 7 லட்சத்து 30 ஆயிரத்து 395; பெண்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 286; மூன்றாம் பாலினத்தவர் 543. 

தென்சென்னை தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133; ஆண்கள் 10 லட்சத்து 851; பெண்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 818; மூன்றாம் பாலினத்தவர் 464. 

மத்தியசென்னை தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161; ஆண்கள் 6 லட்சத்து 67 ஆயிரத்து 465; பெண்கள் 6 லட்சத்து 82 ஆயிரத்து 241; மூன்றாம் பாலினத்தவர் 455. 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119; ஆண்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263; பெண்கள் 12 லட்சத்து 1 ஆயிரத்து 427; மூன்றாம் பாலினத்தவர் 429. 

காஞ்சீபுரம் தொகுதியில் மொத்தம் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866; ஆண்கள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 456; பெண்கள் 8 லட்சத்து 95 ஆயிரத்து 107; மூன்றாம் பாலினத்தவர் 303”. 

என்று தெரிவித்தார்