பிரயாக்ராஜ்

கா கும்பமேளாவை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தற்போது மகா கும்பமேளா நடந்து வரும் இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள் மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் வந்து குவிந்துள்ளனர்..

இதுவரை கும்பமேளாவில் இதுவரை 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்த விழா நிறைவு பெறும்போது சுமார் 65 கோடி பேர் புனித நீராடி இருப்பார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு பிரபலங்கள் புனித நீராடியுள்ளனர்.  மகா கும்பமேளா தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.

அண்மையில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்  அவர். தனது பெற்றோர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்துள்ளதாகவும் திரிவேணி சங்கமத்தில் நீராடியது உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.