ராய்ப்பூர்:
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொட்கள் கைப்பற்றப்பட்டது.