ராய்ப்பூர்.
தகவல் தொடர்பு புரட்சி திட்டத்தின்கீழ் சத்தீஸ்கர் மாநில அரசு இலவச ஸ்மார்ட் போன் வழங்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி மாநிலத்தில் 55 லட்சம் பேருக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.
சத்தீஸ்கர் மாநில முதல் ராமன்சிங், மாநில அரசின் தகவல் தொடர்பு புரட்சி என்ற திட்டத்தின்கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறி உள்ளார்.
மேலும் இதற்காக 230 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ள என்றும், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இலவச ஸ்மார்ட் போன்களை வினியோகித்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
இந்த இலவச ஸ்மார்ட் போன் மாநிலத்தில் உள்ள சுமார் 55 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.