ராய்பூர்: சத்தீஸ்கா் முதலமைச்ச பூபேஷ் பகேல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலையாக வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 34,30,502 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய 8  மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில் நாள் ஒன்றுக்கு அதிகம் தடுப்பூசிகள் செலுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.  தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சத்தீஸ்கா் முதலமைச்சர் பூபேஷ் பகேல் கொரோனா தடுப்பூசி  முதல் டோஸை ராய்பூரில் உள்ள ஜவஹர் லால் மெமோரியல் மருத்துவக் கல்லூரில் இன்று செலுத்திக்கொண்டார்.