சோழிங்கநல்லூர்:

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீவிபத்தில்  நோயாளிகள் மற்றும் ஊழியர் களுக்கு எந்தவித சேதமும் இல்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை எனப்படும் தனியாருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவர். இங்கு அனைத்து வகையான மருத்துவ படிப்புகள் மட்டுமின்றி, மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை மருத்துவமனையில் 2வது மாடியில் உள்ள மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சேமிப்பு அறை தீவிபத்து ஏற்பட்டது. இதையறிந்ததும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்ற வந்த   30க்கும் மேற்பட்ட நோயாளிகள், உடனடியாக பாதுகாப்பாக  வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் தீ மளமளவென எரிந்து  கொளுந்து விட்டு தீ எரியத் தொடங்கியது. இதற்கிடையில் தீயணைப்பு படையினர் விரைநிது வந்து  சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் காரண மாக பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube-feed feed=1]