டெல்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு பிரதமர் மோடி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை  வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றார். அவரது வெற்றிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

உஸ்பெகிஸ்தானில் கடந்த 2ஆம் தேதி முதல் செஸ் தொடர் நடைபெற்ற நிலையில் மொத்தம் 11 சுற்றுகளில் விளையாடிய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி 6 வெற்றி, 4 டிரா, 1 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சீனாவைச் சேர்ந்த டன் ஜோங்யியை எதிர்கொண்டார். 11 சுற்று முடிவில் 8 புள்ளிகள் பெற்று வைஷாலி சாம்பியன் ஆனார்.

கடந்த ஆண்டும் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார்.  இதையடுத்து,  அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  “சிறந்த சாதனை. வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், வைஷாலி அடுத்த ஆண்டு வேட்பாளர் போட்டியில் தனது இடத்தைப் பிடித்தார். இந்தியா இப்போது பெண்கள் பிரிவில் மூன்று பங்கேற்பாளர்களை களமிறக்கும் – வைஷாலி, கோனேரு ஹம்பி மற்றும் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக். நடப்பு பெண்கள் உலக சாம்பியனை யார் எதிர்கொள்வார்கள் என்பதை வேட்பாளர் போட்டி தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்ன் வெளியிட்டுள்ள வார்த்துச் செய்தியில், வைஷாலிக்கு வாழ்த்துக்கள். “மகளிர் கிராண்ட் சுவிஸ் கிரீடத்தை நிதானத்துடனும் திறமையுடனும் பாதுகாத்து, மதிப்புமிக்க மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற நமது சென்னைப் பெண்

இந்த வெற்றி வெறும் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், இப்போது தங்கள் கனவுகள் உலக அரங்கில் பிரதிபலிக்கும் எண்ணற்ற இளம் பெண்களுக்கும் ஒரு கொண்டாட்டமாகும்” என முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  சென்னையை சேர்ந்த வைஷாலி FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்றுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமையான தருணம். வைஷாலிக்கு உங்களில் இன்னும் பல வெற்றிகளை வாழ்த்துகிறேன்” என  தெரிவித்துள்ளார்.

மேலும்,   ஆனந்த்குமார் வேல்குமார் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் பிரதமர் மோடி பாராட்டினார்.