சென்னை
தமிழகத்தின் மூன்றாவது கொரோனா சோதனை நிலையமாகச் சென்னை நியுபெர்க் சோதனை நிலையம் அனுமதி பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் இதுவரை 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனா சோதனை நிலையங்கள் குறைவாக உள்ளதால் பல தனியார் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி பொது மருத்துவமனைகளில் கொரோனா சோதனை நிலையங்கள் உள்ளன.
மூன்றாவதாக சென்னையைச் சேர்ந்த நியுபெர்க் எக்ரிலிச் சோதனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை நிலையம் சென்னையில் உள்ள பாலாஜி நகரில் அமைந்துள்ளது.
இந்த தகவலை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.