ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த கல்வீச்சில் சென்னையை சேர்ந்த திருமணி என்பவர் உயிரிழந்ததற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தை ஆட்சி செய்துவரும் மெகபூபா பாரதியஜனதா கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது, மெகபூபா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த இளைஞர் திருமணி என்பவர் பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்க ளுக்கும் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, திருமணியின் தந்தையை சந்தித்து காஷ்மீர் முதல்வர் மெகபூபா ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்கு முன்னாள் முதல்வரான ஓமர் அப்துல்லா கடும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
மாநிலத்தில் நிலவும் மோசமான நிலையை கையாள்வதில் அரசு, முதல்வர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி – பாரதிய ஜனதா கூட்டணி தோல்வி அடைந்து விட்டது. காஷ்மீரின் நிலையை பிரதமர் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலைமை மேலும் மோசமடைவதற்குள் காஷ்மீர் முதல்வர் பதவியில் இருந்து மெக்பூபா முப்தி விலக வேண்டும் என்றும் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார் சென்ற சென்னையை சேர்ந்த இளைஞர் திருமணி என்பவர் கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டமும் தெரிவித்து உள்ளார்.