ஃபின்லாந்து : காணாமல் போன சென்னை இளைஞர் பிணம் கடலில் கண்டுபிடிப்பு!

Must read

ஹெல்சின்கி, ஃபின்லாந்து

சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த இளைஞர் ஃபின்லாந்தில் காணாமல் போய் விட்டார். அவரது சடலம் கடலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26 வயது எஞ்ஜினீயர் ஹரிசுதன் ஃபின்லாந்தில் டி சி எஸ் நிறுவனத்தில் பணி புரிபவர்.  கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவர் காணாமல் போய் விட்டதாக இந்திய தூதரகம் அறிவித்திருந்தது.  இது பற்றி பத்திரிகை.காம் ஏற்கனவே செய்தி வெளியிட்டுருந்தது தெரிந்ததே.

https://patrikai.com/chennai-youth-missing-in-finland-for-more-than-a-week/

தற்போது அவரது சடலம் உள்ளூர் போலீசாரால் வியாழன் அன்று கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஃபின்லாந்தில் உள்ள ஹெர்னெசாரி என்னும் கடற்கரையில் உள்ள கடலில் கண்டேடுக்கப்பட்ட பின், நேற்று அடையாளம் காணப்பட்டு, பரிசோதனைக்கு சடலம் அனுப்பப்பட்டுள்ளது.  சட்டபூர்வமான நடவடிக்கைகள் முடிந்த பின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் அளிக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று ஃபின்லாந்து நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹரிசுதன் அவர் தாயாருடன் மொபைலில் இருந்து பேசி உள்ளார்.  பிறகு அவர் தனது வீடு நோக்கி மாலை 5.40க்கு நடந்து செல்வது ஒரு காமிராவில் பதிவாகி உள்ளது.  அதன் பின் மாலை சுமார் 6.45 மணிக்கு அவருடைய மொபைல் ஹர்னசாரியில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஃபின்லாந்து போலிசார் ஹரிசுதனின் மரணத்தைப் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article