
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், சென்னை – வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய போட்டி, கோல்கள் இன்றி டிராவில் முடிவடைந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளுமே முயற்சிகள் மேற்கொண்டும், கோல்கள் போடப்படவில்லை. எனவே, முதல் பாதி ஆட்டம் கோல்கள் இன்றி முடிந்தது.
பின்னர், இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியது. அதில், வடகிழக்கு அணி 55வது நிமிடத்தில் கோலடிக்க முயன்று தோற்றது. பின்னர், 60வது நிமிடத்தில் சென்னையின் கோல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பின்னர், 66வது நிமிடத்தில் வடகிழக்கு அணியின் கோல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இப்படியாக, இரு அணியின் போராட்டங்கள், ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை நீடித்தது. இதனால், இறுதியில் ஆட்டம் 0-0 என முடிந்தது.
[youtube-feed feed=1]