
சென்னை – டெல்லி அணிகள் நேற்று மோதிய ஐபிஎல் 34வது போட்டியில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரிலேயே முதன்முதலாக மெய்டன் ஓவர் வீசப்பட்ட போட்டியாக இது அமைந்தது. அதுவும் 2 இன்னிங்ஸ்களில் தலா 1 மெய்டன் ஓவர்.
சென்னைக்கு எதிராக டெல்லி வீரர் ரபாடா 1 மெய்டன் ஓவரும், டெல்லிக்கு எதிராக சென்னை வீரர் தீபக் சஹார் ஒரு மெய்டன் ஓவரும் வீசினர். பேட்ஸ்மென்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கக்கூடிய டி-20 போட்டியில் மெய்டன் ஓவர் வீசுவதெல்லாம் வேறு லெவல்!
நேற்றையப் போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், நேற்றையப் போட்டியில் பேட்ஸ்மென்களின் ஆதிக்கமே இருந்தது எனலாம்.
மேலும், இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலும் மட்டுமே சதம் அடித்திருந்தனர். தற்போது, அப்பட்டியலில் மூன்றாவது வீரராக டெல்லியின் ஷிகர் தவானும் இணைந்துள்ளார். அவருக்கு சிலபல அவுட் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர் சென்னை வீரர்கள் என்பது வேறு விஷயம்.
Patrikai.com official YouTube Channel