சென்னை:
சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அடுக்கு மாடி ரெயில் விட இந்திய ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக  சதர்ன் ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை – திருவனந்தபுரம் இடையே  அடுக்குமாடி அதிவேக சூப்பர்பாஸ்ட்  அடுக்கு மாடி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க சதர்ன் ரெயில்வே  முடிவு செய்துள்ளது. இந்த ரெயிலுக்கு உதய் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வாரத்துக்கு இரண்டு முறை  மட்டுமே  இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரவு  7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை  திருவனந்தபுரம் சென்றடையும்.
தற்போது  சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்ல 16  முதல் 18 மணி நேரம் ஆகிறது. ஆனால் உதய் ரெயில் 14 மணி நேரத்தில் திருவனந்தபுரம் சென்றடையும்  ரெயில்வே அறிவித்துள்ளது.
1doube;
மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் ஏசி வசதி கொண்ட 11 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 120 பயணிகள் பயணம் செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது.