சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம் காட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கரையோரம் நெருங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் தீவிர மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று முதல் ஓரிரு நாட்களுக்கு மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் சாலையில் தடைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.