துபாய்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு புதிய முறையில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டில்லி அணி ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறது.
இதுவரை டில்லி அணி 8.1 ஓவரில் விக்கட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளன.
பந்து வீசி வரும் சென்னை அணி தங்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம் அடைந்தார்.
இன்று பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்தார்.
இவர்கள் இருவருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel