சென்னை,

கடந்த இரண்ட நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இயங்கி வந்த குமரன் தங்க மாளிகையில் உள்ள சுமார் 400 கிலோ எடையுள்ள தங்கத்தின் தற்போதைய நிலை என்ன? என கேள்வி எழுந்துள்ளது.

தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்கமாளிகை தீ விபத்து காரணமாக முற்றிலும் எரிந்து நாசமாகியது. தற்போது அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த ஸ்ரீகுமரன் தங்கமாளிகையில் உள்ள  சுமார் 400 கிலோ எடையுள்ள தங்கமும், பல கோடிக்கணக்கில் மதிப்புள்ள வைரங்களும் இடிபாடுகளுக்கிடை யில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக நகைக்கடைகளில் உள்ள நகைகள் அனைத்தும், இரவு கடையை பூட்டிச்செல்லும் முன் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பது வழக்கம். அதுபோல சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் உள்ள ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் நகைகளும் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்து காரணமாக கட்டிடத்தின் உள்பட உள்பட வெளிப்பகுதியும் இடிந்துள்ளதால், பாதுகாப்பு பெட்டகமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பெட்டகத்தில் சுமார்  ரூ 20 கோடி மதிப்பிலான வைர நகைகளும் சுமார் 400 கிலோ எடையுள்ள தங்க நகைகளும் , 2000 கிலோ வெள்ளி பொருட்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

நகைக்கடைக்காரர்கள் பலரின் கூற்றுப்படி, பாதுகாப்புப் பெட்டகம் இயற்கை பேரழிவு மற்றும் தீ விபத்து ஆகியவைகளின் தாக்கத்தை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதினால் தங்க வைர நகைகளுக்கு எந்த இழப்பும் இருக்காது என தெரிய வருகிறது.

முதல் கட்ட விசாரணையின் தகவலின்படி சுமார் 80 கோடி ரூபாய் பெறுமானமுள்ள துணிமணிகள் தீயில் எரிந்துபோனதாகவும்,

கடை உரிமையாளர்கள் கடையிலுள்ள அனைத்துப் பொருட்கள், மற்றும் கட்டிடம் ஆகியவற்றை இன்ஷ்யூர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

தீ விபத்து நடந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ரூ.300 கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம்: காவல்துறை கூறியுள்ளது.