மும்பை: பெங்களூருவுக்கு எதிராக, முதலில் பேட்டிங் ஆடிவரும் சென்னை அணி, 11 ஓவர்களில், 1 விக்கெட் இழந்து, 90 ரன்களை எடுத்துள்ளது.

தொடக்க வீரர் ருதுராஜ், 25 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிஸ், 35 பந்துகளில் 42 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா, 11 ரன்களுடன் அவருடன் ஆடிவருகிறார்.

பெங்களூரு அணி, சேஸிங்கில் வலுவாக செயல்படும் இருக்கும் நிலையில், தற்போது முதலில் பேடடிங் ஆடிவரும் சென்னை அணி, முடிந்தளவிற்கு அதிக ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 190 ரன்களுக்கு மேல் அடிப்பதோடு, பந்துவீச்சு & பீல்டிங் சிறப்பாக இருந்தால் மட்டுமே, கோலியின் அணியை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலிலும் முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.