மும்பை: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் அதகளத்தால், சென்னை அணி, 20 ஓவர்களில் 191 ரன்களை சேர்த்துள்ளது.
சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில், 24 ரன்களை சேர்த்து அவுட்டானார். அதில் 3 சிக்ஸர்கள் அடக்கம். அம்பாதி ராயுடு 7 பந்துகளில் 14 ரன்களை விளாசினார்.
ரவீந்திர ஜடேஜா, 28 பந்துகளை சந்தித்து 62 ரன்களை விளாசினார். அதில், 5 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடக்கம். அவர் கடைசிவரை நாட்அவுட்டாக நின்றார். இன்னும் ஒரு ஓவர் கிடைத்திருந்தால் அவர் இன்னும் பெரிய ரன்களை அடித்திருப்பார். டூ பிளசிஸ் 41 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
ஜடேஜாவுடன், மறுமுனையில் நின்ற தோனி, 3 பந்துகளை மட்டுமே சந்தித்து, 2 ரன்களை எடுத்து ஒதுங்கிக்கொண்டார். அவர் அதன்பிறகு ஸ்ட்ரைக் எடுக்கவில்லை.
இறுதியில், சென்னை அணி, 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 191 என்ற சவாலான ரன்களை எட்டியுள்ளது.
பெங்களூரு அணிக்காக 3 விக்கெட்டுகள் எடுத்த ஹர்ஷல் படேல்தான், அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பெளலராகவும் மாறிப்போனார். அவர் 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.