சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜனவரி 14) மாலை தொடங்கி வைக்கிறார்.

தமிழர் திருநாளாம் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் ( தை 1 – ஜனவரி 15) அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில், சென்னை சங்கமம் எனப்படும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை தொடங்கி வைக்கிறார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது நடைபெற உள்ளது. திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வு அமைகிறது.
இதை தொடங்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் கண்டுகளிக்கிறார். இதைத்தொடர்ந்து, சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இந்த சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
[youtube-feed feed=1]