வாஷிங்டன்:

லக அளவில் மாணவர்களின் கல்விக்கான தர வரிசையில், தமிழகத்தை சேர்ந்த சென்னை  115 இடத்தை பிடித்துள்ளது. லண்டன் முதலிடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் திறனை வளர்க்கும் வகையில் மாணவர்களின் கல்விக்கு ஏற்ற சிறந்த கல்லூரிகள் எங்குள்ளது, என்பது  குறித்து, கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS Quacquarelli Symonds) எனும் கல்வி தொடர்பான உலகளாவிய அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வுக்காக   ம் நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், வேலைவாய்ப்பு, மாணவர்கள் விரும்பக்கூடியது, கல்வி கட்டணம்  ஆகிய காரணிகளை கொண்டு ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவில் நான்கு மாநிலங்களில் இடம்பிடித்துள்ள நிலையில், சென்னை 115வது இத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

உலக அளவில் மாணவர்கள் கல்வி பயில  மிகச்சிறந்த நகரமாக மீண்டும் லண்டன் தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 2வது இடத்தில் டோக்கியோ, 3வது இடத்தில் மெல்போர்ன், முனிச், பெர்லின் மாண்டிரல், பாரிஸ், சூரிச், சிட்னி, சியோல் ஆகியவை உள்ளன.

இந்திய அளவில், பெங்களூரு 81வது இடத்தை பிடித்து இந்தியாவில் முன்னிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து  மும்பை 85வது இடத்தையும், தலைநகர் டெல்லி 113வது இடத்திலும், சென்னை 115வது இடத்தில் உள்ளன.

மேற்கொண்டு விரிவான தகல்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்….

http://QS Quacquarelli Symonds