சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது.
இதை விரிவு படுத்தும் விதமாக தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 66 புதிய தாழ்த்தள பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 9 பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்த்தில் இருந்து பிராட்வே-க்கு 10 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தவிர, 6D வழித்தடத்தில் 8 பேருந்துகளும், வடபழனி – கிளாம்பாக்கம் இடையே 6 பேருந்துகளும் இயக்கப்படுகிறது, 21G வழித்தடத்தில் 6 தாழ்தள பேருந்துகள் என மொத்தம் புதிதாக 66 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளது.