சென்னை

தொழில்நுட்ப கொளாறு காரணாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிக்க்ப்பட்டது.

சென்னை மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை மிகவும் உதவியக் உள்ளது.  இந்நிலையில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மெட்ரோ ரயில் நிர்வாக்ம் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது.

சுமார் ஒரு மணி நேர்த்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு\ நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரெயில் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சேவை பாதிப்பால் ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.