மீண்டும் தோற்ற சென்னை அணி – சுத்தமாக ஃபார்மில் இல்லாத தோனி & கேதார் ஜாதவ்

Must read


ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், சாதாரண 167 ரன்களை எட்ட முடியாமல், 10 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது சென்னை அணி.
சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிதாக வ‍ெல்ல வேண்டிய ஒரு போட்டியை, அசட்டையாக கோட்டைவிட்டுள்ளது.
அணிக்கு பாரமாக இருக்கும் கேதார் ஜாதவை, அணியில் தொடர்ந்து வைத்திருப்பதும், தான் எதற்காக ஆடுகிறோம் என்று தெரியாமலேயே, தோனி தொடர்ந்து ஆடி வருவதும் தொடர்கிறது.
சென்னை பேட்டிங்கில், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு போன்றவர்கள் சுமாராகவே ஆடினார்கள். கடைசிநேர அதிரடியில் இறங்கிய ஜடேஜாவுக்கு பந்துகள் கிடைக்கவில்லை.
ஒரு இக்கட்டான நேரத்தில் களத்தில் நின்ற கேதார் ஜாதவ், 12 பந்துகளில் 7 ரன்களை அடித்து அனைவரையும் வெறுப்பேற்றினார். ஒரு சிக்ஸர் & 1 பவுண்டரி சென்னையை அணியை கரைசேர்த்திருக்கும் என்ற நிலையில், அணிக்கு பாரம் என்ற வகையில் கேதார் ஜாதவ் செயல்பட்டது கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும், இதுவரை எந்தவொரு போட்டியிலும், தோனி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா? என்பது பெரிய கேள்வியாகியுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article