சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தெலுங்கானா, ஆந்திர நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 மாவட்ட நீதிபதிகளை பதவி உயர்வு வழங்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனப்டி ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தேவராஜு நாகார்ஜூன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை நியமனம் செய்து, குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்