சென்னை: அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. போலீஸ் எஸ்.பி. அமல்ராஜ் வீட்டில் இருந்து ஆறரை கிலோ நகைகள் மீட்கப்பட்ட உள்ளதாகவும், மேலும் 8 இடங்களில் இருந்து மற்ற நகைகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிராம் நகைகள் மீட்கப்பட்டு விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
கடந்த 13ந்தேதி(சனிக்கிழமை) மதிய வேளையில், சென்னை பெடரல் வங்கியின் அருகம்பாக்கம் நகைக்கடன் பிரிவில் துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், சென்னை காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்த காவல்துறையினர், பல அ தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், அந்த வங்கியில் பணிபுரிந்து முன்னாள் ஊரியர் உள்பட பல குற்றவாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக கைது செய்யப்பட்டனர். முதலில் முருகன் என்ற முக்கிய குற்றவாளியும், சந்தோஷ், சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸ் எஸ்.பி. குடும்பத்தினர் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய கண்காணிப்பாளர் அமல்ராஜ் வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்ட போது சுமார் மூன்றரை கிலோவுக்கும் அதிகமான நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ஆறரை கிலோ அளவிலான கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் சஸ் பெண்டு செய்யப்பட்ட அமல்ராஜ், சமூக வலைதளங்களில் காவல்துறை மீது நடத்தப்பட்ட விமர்சன தாக்குதலைத் தொடர்ந்து, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ்- ஐ 414 சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த கொள்ளையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ வட்சன் நகைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக சிறிய வகை, நகை உருக்கும் இயந்திரம் ஒன்றை கொள்ளையர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் மூலம் நகைகளை உருக்கி விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று உள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக மொத்தம் 6 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். முக்கிய கொள்ளையனான முருகனுக்கு வங்கியின் அலாரம் சிஸ்டத்தை எவ்வாறு ஆப் செய்வது என்பது தெரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தம் 31.700 கிராம் நகைகள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த உள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி அமல்ராஜ் விசாரணை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் அதிகாரிகள், இந்த கொள்ளை நடப்பதற்கு முன்பு அமல்ராஜ்க்கு தகவல் தெரியாது கொள்ளைக்கு பின்னர் தான் அவர் நகைகளை பதுக்கி வைக்க உதவியாக இருந்துள்ளார். அதனால் அமல்ராஜ் தற்போது section 414 திருட்டுக்கு உடந்தை என்கிற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அமல்ராஜ் மட்டுமே இதில் குற்றவாளி வேறு எந்த காலவல்துறையினரும் இல்லை. அமல்ராஜ் இதற்கு முன்னர் இது போல ஈடுபட்டது இல்லை என்று அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால், இந்த கொள்ளையில் அமல்ராஜ் மனைவி உள்பட பலருக்கு சம்பந்தம் இருப்பதாகவும், கொள்ளையர்களின் ஒருவர், அமல்ராஜ் குடும்பதுக்கு சொந்தமானவர் என்றும் கூறப்படுகிறது.