சென்னை
சென்னை மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம் அற்விக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. தினந்தோறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என பலதரப்பு மக்களும் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். சில நேரங்களில் மின்சார ரயில்களின் வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படும்.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் தாம்பரம் – கடற்கரை இடையே அட்டவணையின்படி மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் அங்கிருந்து சென்னை கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் சேவையில் மாற்றப்பட்ட நேர அட்டவணை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும்”
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.