சென்னை: சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேலும் 2 எஸ்கலேட்டர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்கலேட்டர் வசதி, நடைமேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.16 கோடியே 23 லட்சத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்தவுடன் பயணிகளின் சேவைக்கு படிப்படியாக  என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில்  அமைக்கப்பட்டு, 2019ம் ஆண்டு டிசம்பர் 1ந்தேதி திறந்த வைக்கப்பட்டது. பின்னர் மேலும் சில எஸ்கலேட்டர்கள் அமைக்ப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது.

அதையடுத்து மேலும் மேலும் பல  எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணி, தெற்கு பக்கம், நடை மேம்பாலம் விரிவாக்க பணி மற்றும் இப்பாலத்திற்கு எஸ்கலேட்டர் அமைக்கும் பணி, ஆகியவை சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தில் கடந்த 2020 ஜனவரியில்  தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பணிகள் முடங்கியது. பின்னர் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த இரு மாததங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றுவந்தது. தற்போது, ரெயில் நிலையத்துக்கு வரும் பயணியர், தெற்கு பக்கம் நடை மேம்பாலத்துக்கு செல்ல ஏதுவாக, எஸ்கலேட்டர் கட்டுமான பணிகளும் முடிவடைந்தது.

அதன்படி, ரெயில் நிலையத்தில் இருந்து காந்தி இர்வின் சாலைக்கு  மக்கள் எளிதில்  செல்லும் வகையிலான 2  எஸ்கலேட்டர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்த 2 புதிய எஸ்கலேட்டர்களும், பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் நிறுவப்பட்டுள்ளன, அங்கு மக்கள் ஆட்டோக்கள் மற்றும் வண்டிகளில் இருந்து இறங்கியதும் எளிதில்  பிளாட்பாரம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த எஸ்கலேட்டர்களை இந்த மாத இறுதியில் ஓய்வு பெறும் வணிக உதவியாளர் எம்.செல்வராஜ் திறந்து வைத்தார். இதன் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு உள்ள எஸ்கலேட்டர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

11 பிளாட்பாரங்களை  கொண்ட எக்மோர் ரயில் நிலையம் தினமும் 1.2 லட்சம் பயணிகளைக் கையாளுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.