மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள், 3,220 இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன் 16 ப்ரோ மொபைல்கள் என மொத்தம் ரூ.1.02 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைக் கொண்டு கோலாலம்பூரில் இருந்து வந்த நான்கு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் அவர்களது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிராம் எடையுள்ள 24 கேரட் தூயதங்கத்தில் செய்யப்பட்ட இரண்டு தங்கச் சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்களின் பைகளில் இருந்து 3,220 வகையான இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.