சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி, கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்களை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் மற்றும் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், தற்போது கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
முன்னதாக, சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி உயர் அலுவலர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஏற்கனவே 45 பறக்கும் படைகள் செயல்பட்டு வருவதாகவும், வாக்களிக்கும் தேதிக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கூடுதல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுப்படுவதாக கூறினார்.
இதையடுத்து இன்று மேலும 45 பறக்கும் படையினர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை! ககன்தீப்சிங் பேடி…