சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று மாநகராட்சி மைய மண்டபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், .அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவ, வார்டு மேம்பாட்டு நிதி அதிகரிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு 6 மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் தொடங்கியது. இதையத்து, நடப்பு நிதி ஆண்டான 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த கணக்குகளை வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் சர்பஜெயதாஸ் (வார்டு எண்-41) தாக்கல் செய்தார்.
சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ₨30 லட்சத்தில் இருந்து ₨35 லட்சமாக அதிகரிக்கப்படுவதாகவும், சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கு ₨70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.
2011 கணக்கின்படி, சென்னையில் 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சமாக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை முறையில், நடந்து முடிந்த நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சொந்தவரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் அவையையில் இருந்த வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் மீதான விவாதமும் இன்று மதியம் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த பட்ஜெட்டில் இடம்பெரும் அறிவிப்புகளில் பெரும்பான்மையானவை ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.